கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கிழக்கு மாகாணத்தில் இருந்து 2000 பேர் ஆசிரிய சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளனர் என கிழக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா நேற்றுத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் மண்முனை மேற்கு, வாகரை, மட்டக்களப்பு மத்தி ஆகிய கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் மிக நீண்டகாலமாக நிரப்பப்படாததால் அப்பகுதி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த விடயம். இதனை எவ்வாறு நிவர்த்தி செய்யப் போகிறீர்கள் என இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
மண்முனை மேற்கு, வாகரை ஆகிய கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்காக, புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதைத் தவிர வேறுவழியில்லை. ஆதலால் புதிதாக 2000 பேர் ஆசிரிய உதவியாளர்களாக உள்ளீர்க்கப்பட இருக்கின்றனர். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment