கொரோனா வைரஸ் காரணமாக நெரிசலான பகுதியில் கூடும் அனைவரும் முகத்தை மூக்கு கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கொழும்புக்கு வரும் அனைவரும் மூக்கு கவசம் அணியுமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாக கொழும்பு தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பு நகரத்தில் உள்ள பொது இடங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்குள் நுழையும்போது இந்த முறையை பின்பற்றுமாறும், ஊழியர்களும் முகமூடி அணியுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
கொழும்பு தொற்றுநோயியல் பிரிவின் தலைமை வைத்தியர் சுதத் சமரவீரா நோயைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதிய கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் திறன் கொண்டது. இந்த நோய் பிற நாடுகளிலிருந்து பரவுவதால் இலங்கைக்குள் பரவாமல் தடுக்க பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதற்கான முன்நிபந்தனைகள் இலங்கை விமானநிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விமானம் குறித்து விளக்கமளிக்கப்படுவதோடு, அதிக காய்ச்சல், இருமல், சளி மற்றும் சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருந்தால் விமான நிலைய சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விமான நிலையத்தின் சுகாதார பிரிவு 24 மணி நேரமும் இயங்குகிறது.
இலங்கைக்கு வரும் பயணிகளிடையே காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிய ஸ்கானர்கள் நிறுவப்பட்டுள்ளன.
சுவாச அறிகுறிகளுடன் ஒரு பயணி விமான நிலையத்தின் சுகாதாரத் துறையை அணுகினால், அவர்களிடம் புதிய கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment