கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ள சீனாவின் வூஹான் மற்றும் சிச்சுஆன் மாகாணங்களில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் சிச்சுன் மாகாண சென்ங்டு பகுதியில் இருந்து 150 இலங்கை மாணவர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர ஜனாதிபதி செயலகம், வெளியுறவு அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் என்பன இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
சீனாவிலுள்ள மாணவர்களை அங்கிருந்து அழைத்து வர 50% விமானக் கட்டண தள்ளுபடியை ஶ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.சீனாவில் உள்ள மாணவர்களுக்காக பிரத்தியேக விமானமொன்றை அனுப்புவதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த நிலையில் ஏற்கனவே அங்கிருந்து 03 இலங்கை மாணவர்கள் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். ஏனையவர்கள் சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு ஏற்ப அங்கேயே தங்கியுள்ளனர். எனினும் அவர்களையும் இலங்கைக்கு திருப்பியழைக்குமாறு கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சீனா எங்கும் பரந்திருக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment