Ads (728x90)

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை ரூபா 5 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டதோடு, வௌிநாடு செல்வதற்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

உரிய அனுமதிப்பத்திரமின்றி கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக தெரிவித்து அவர் நேற்று முன்தினம் மாதிவெலவிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த கைத்துப்பாக்கியுடன் அதற்கான 127 தோட்டாக்களும் இதன்போது மீட்கப்பட்டது. அத்துப்பாக்கியின் அனுமதிப்பத்திரம் 2016 இல் காலவதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget