காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கவுடன் தியத்தலாவையில் அமைந்துள்ள அந்நிறுவனத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாம் இன்று எமது நாட்டின் பயணப் பாதையை மாற்றும் யுகத்திலேயே உள்ளோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் மனித வள அபிவிருத்தி தொடர்பில் அவரின் கொள்கைப் பிரகடனத்தில் இரண்டு அடிப்படைக்காரணிகள் சேர்க்கப்பட்டன. அதன்படி உயர் தரத்தில் சித்திபெற்ற ஆனால் வாழ்க்கையில் தோல்வியுற்ற மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான நடவடிக்கையை நாம் விரைவாக எடுத்து வருகின்றோம்.
நில அளவைத் திணைக்களத்தால் நீண்ட காலமாக நடத்திவந்த பயிற்சி வழங்கும் கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் இந்நிறுவனத்தை அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகமாக மாற்ற நாம் முடிவு செய்துள்ளோம். அதற்கான தேவையான பௌதிக வளங்களான கட்டடங்கள், தங்குமிட வசதிகள் இங்கு உள்ளன. அதேபோல் அதற்குத் தேவையான மனித வள மற்றும் நிபுணத்துவ வளங்களும் இங்குள்ளன. மேலும் இது தொடர்பான அனுபவமுடைய ஓய்வுபெற்ற அதிகாரிகளையும் இணைத்து தேவையான கற்கைகளைப் இங்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment