Ads (728x90)

ஈரான் தளபதி சுலைமானின் கொலையைக் காரணமாக வைத்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் யுத்தமொன்று ஏற்பட்டால், தமது ஆதரவை அமெரிக்காவுக்கு வழங்குவதாக நேட்டோ அமைப்பு அறிவித்துள்ளது. இந்த அமைப்பில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜேர்மன், பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகள் பல அங்கம் வகிக்கின்றது.

நேட்டோ North Atlantic Treaty Organization என்பதன் சுருக்கப் பெயராகும். இது 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் வட அத்திலாந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் உருவான ஒரு இராணுவக் கூட்டணி ஆகும். இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரசல்சில் உள்ளது.

வெளியார் தாக்குதலுக்கு எதிராக பரஸ்பர பாதுகாப்பு உதவி வழங்குவதற்கு இதிலுள்ள உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இணங்கியதன் மூலம் இவ்வமைப்பு ஒரு கூட்டுப் பாதுகாப்பு முறையைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்ற முறுகல் நிலைமையை அடுத்து, பிரசல்ஸ் நகரிலுள்ள நேட்டோ தலைமையகத்தில விசேட அவசர கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜெனரல் ஜேன்ஸ் ஸ்டொல் டென்பர்க் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Post a Comment

Recent News

Recent Posts Widget