Ads (728x90)

அமெரிக்க இராணுவம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் செயல்பட்டு வருகிறது.

முதலாவதாக ஈரானில் இருக்கு அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற ஈரான் அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு அமெரிக்கா தரப்பில் கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

முன்னர் அணு ஆயுதங்களை அதிகளவில் சோதனை செய்து வந்த ஈரான் வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி அணு ஆயுத உற்பத்தியை குறைத்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது அணு ஆயுத ஒப்பந்தத்தை இரத்து செய்து கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஒப்பந்தத்தை ரத்து செய்யும் ஈரானின் நடவடிக்கையை தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் மீது பொருளாதார தடைகளை ஏற்படுத்த போவதாக கூறியுள்ளார். இதனால் வல்லரசு நாடுகள் போர் ஏற்படும் சூழலை தவிர்க்க இரு நாடுகளையும் சமரசம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget