சீனாவில் வூஹாங் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் இரு மாகாணங்கள் உட்பட உலகின் 18 நாடுகளுக்கும் பரவத் தொடங்கி உள்ளது. இது உயிருக்கு ஆபத்தான கொடிய நோயாக உள்ளது.
அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மற்றும் ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் பரவத் தொடங்கியதை அடுத்து உலக சுகாதார அமைப்பு, சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகனப்படுத்தி உள்ளது.
சீனா தவிர 18 உலக நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன் 5 முறை சர்வதேச அளவில் உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment