Ads (728x90)

சீனாவின் வுஹான் நகரில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வர விமானம் ஒன்றை அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். குறித்த விமானத்தில் விசேட பயிற்சி பெற்ற சுகாதாரக் குழுவொன்றும் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

இலங்கை மாணவர்கள் 33 பேர் வுஹான் நகரில் உள்ளனர். அவர்கள் அழைத்துவரப்பட்டதும் அவர்களை விசேட பஸ் ஒன்றின் மூலம் தியத்தலாவைக்கு அழைத்துச் சென்று அவர்களை தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள வைத்திய பாதுகாப்பு பிரிவில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget