யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவிகள் மீது பகிடிவதை என்ற பெயாில் பாலியல் துன்புறுத்தல் புாிந்த குற்றச்சாட்டில் 08 மாணவா்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், பல்கலைகழக வளாகத்திற்குள் நுழையவும், கற்றலில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பல்லைகழக மாணவிகள் மீது பகிடிவதை என்ற பெயாில் பாலியல் துன்புறுத்தல் புாிந்த குற்றச்சாட்டு தொடா்பாக பல்வேறு மட்டங்களில் அழுத்தங்கள் அதிகாிக்கப்படுவதுடன், குற்றம் புாிந்த மாணவா்களை அடையாளம் கண்டு முதற்கட்டமாக தண்டிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில், பாலியல் தொல்லை கொடுத்த 08 போ் அடையாளம் காணப்பட்டு தடை விதிக்கப்பட்டதென யாழ்.பல்கலைகழக நிா்வாகம் அறிவித்திருக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment