தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13-வது உலகக் கிண்ணத்தின் இறுதி ஆட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. இப்போட்டியில் முதல் முறையாக பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.
இறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களை பெற்றிருந்தது. யஷஸ்வி ஜய்சவால் (88), என்.டி.டி வர்மா (38) ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பங்களாதேஷின் பந்துவீச்சில் அவிஷேக் தாஸ் (3), சொரிபுல் இஸ்லாம் (2) விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
இந்நிலையில் 178 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடியது. இதன்போது போட்டியில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக 46 ஓவர்களில் 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 42.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றிருந்த பங்களாதேஷ் அணி சம்பியனாகியது.
துடுப்பாட்டத்தில் ஹுசையின் இமோன் (47), அக்பர் அலி (43) ஓட்டங்களை பெற்றிருந்தனர். இந்தியாவின் பந்துவீச்சில் ரவி பிஷ்னொய் (4) விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment