Ads (728x90)

இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான தனியார் விமான சேவை இன்று முதல் ஆரம்பமாக உள்ளது.

நேர அட்டவணையின் அடிப்படையிலான தனியார் விமான சேவைகளை அறிமுகம் செய்யும் முதலாவது நிறுவனமாக பிட்ஸ் எயார் (Fits Air) நிறுவனம் சேவையை ஆரம்பிக்கின்றது.

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையதிற்கு திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இந்த விமான சேவை இடம்பெற உள்ளது. இரத்மலானை விமான நிலையத்திலிருந்து காலை 7.30 க்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து 8.20 க்கும் இந்த விமான சேவை இடம்பெறும்.

கொழும்பிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாணத்திற்கு காலை 8.20 மணிக்கு சென்றடையும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் விமானம் கொழும்புக்கு காலை 10.20  மணிக்கு சென்றடையும்.  ஒரு வழி பயணச்சீட்டு கட்டணமாக  7500 ரூபா அறிவிடப்படவுள்ளது.

கட்டணமின்றி 7 கிலோ கிராமும்,  750 ரூபா செலுத்தி 20 கிலோ கிராமும் பொதிகளை கொண்டு செல்லலாம். மேலதிக ஒரு கிலோ கிராமுக்கு ரூபா 100 வீதம் அறிவிடப்படும்.

இந்த விமான சேவைக்காக 70 ஆசனங்களைக் கொண்ட ATR 72 ரக விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. இதேவேளை இந்த நிறுவனம் ஏற்கனவே மட்டக்களப்புக்கு தனது விமான சேவைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget