வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி எனும் புதிய அரசியல் கூட்டணி வடக்கில் நேற்று உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகியுள்ள புதிய கூட்டணியான “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி”புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ரில்கோ விருந்தினர் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக ஏற்பட்ட இழுபறி நிலைமைகளால் அது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பீ.ஆர்.எல்.எப், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் நேற்று இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment