Ads (728x90)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ்ப்பாணம் – மயிலிட்டி பகுதியில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம் தொண்டமான் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 28 ஆயிரம் கொங்கிரீட் நிரந்தர வீடுகள் உருவாக்கப்படவுள்ளது. புதிய வீட்டுத் திட்டத்தில் கொங்கிறீட் தகடுகளைக் கொண்டு நவீன முறையில் 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா செலவில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்படவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget