மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது களத்தடுப்பை தேர்வு செய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
மேற்கிந்தியத்தீவுகள் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை குவித்தது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷெய் ஹோப் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 115 ஓட்டங்களையும் (140 பந்துகளில் 10 பவுண்டரிகள்), ரோஸ்டன் சேஸ் 41 ஓட்டங்களையும் (45 பந்துகள், 3 பவுண்டரிகள், 1 சிக்சர்), கீமோ போல் 32 ஓட்டங்களுடனும் (17 பந்துகள், 4 பவுண்டரி, 1சிக்சர்), ஹெய்டன் வேல்ஸ் 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் இசுறு உதான 82 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், நுவான் பிரதீப், திசார பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
290 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது.
இங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ 50 ஓட்டங்களையும், மற்றும் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். 17.6 ஓவரில் 111 ஓட்டங்களை பெற்ற போது இலங்கை முதலாவது விக்கெட்டை இழந்தது.
தொடர்ந்து களமிறங்கிய குசல் பெரேரா 42 ஓட்டங்களுடனும், குசல் மெண்டீஸ் 20 ஓட்டங்களுடனும், அஞ்சலோ மெத்தியூஸ் 5 ஓட்டங்களுடனும், தனஞ்சய டிசில்வா 18 ஓட்டங்களுடனும், திசர பெரேரா 32 ஓட்டங்களுடனும், உதான 0, சந்தகன் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் 215- 6 என தடுமாறியது.
8வது வீரராக களமிறங்கிய வனிந்த ஹசரங்க கடைசிவரையும் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களுடனும் நுவான் பிரதீப் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
ஹசரங்க 49 வது ஓவரின் 5வது பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை சமப்படுத்தினார். இறுதி ஓவரின் முதல் பந்தில், ஆட்டமுனைக்கு அவர் வர முயல, சந்தகன் ரன் அவுட்டானார். ஆனால் கீமோ போல் அடுத்த பந்தை நோ போலாக வீச இலங்கை இறுதியில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் ஹசரங்க தெரிவானார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment