மத்திய வங்கி பிணைமுறி மோடி வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் உள்ளிட்ட 10 பேரை கைதுசெய்வதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடந்த புதன்கிழமை புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டடிருந்தது. இதன்போது நீதிவான் குறித்த 12 பேருக்கும் எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட 12 சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து, சந்தேக நபர்களாக அவர்களை பெயரிட்டு, பிடியாணையினைப் பெற்றுக்கொண்டு கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அன்றைய தினம் ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்நிலையிலேயே இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்ற விசாரணைக்காக வந்தபோது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment