இலங்கை வங்கியின் பொது முகாமையாளரை விலக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் உள்ள இலங்கை வங்கி ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளனர். இந்த அடையாள வேலை நிறுத்தம் காரணமாக வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரிங்களுக்கு முகம் கொடுத்தனர்.
இலங்கை வங்கியின் தன்னியக்க சேவை மாத்திரம் ஒரு சில வங்கிகளில் இடம்பெற்றதுடன் ஏனைய சேவைகள் எதுவும் நடைபெறவில்லை. ஒரு சில வங்கிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது. பல்வேறு நகரங்களிலும் உள்ள வங்கிகள் மூடப்பட்டமையினால் பெருவாரியான மக்கள் வங்கியில் பணம் பெற முடியாது பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர்.
இலங்கை வங்கிக்கு பொறுப்பான பொது முகாமையாளரை அரசியல் அழுத்தங்களை பிரயோகித்து பலாத்காரமாக அகற்றியமை மற்றும் முறையற்ற விதத்தில் பொது முகாமையாளரரை நியமித்துள்ளதாக இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவிக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment