Ads (728x90)

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் இருந்து எந்தவொரு நாடும் வெளியேறமுடியாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவை இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் தொடர்பான யோசனையின் இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஜெனீவாவில் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குவிதிகளின்படி நிறைவேற்றப்பட்ட யோசனை ஒன்றில் இருந்து நாடு ஒன்று வெளியேறமுடியாது என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிக பேச்சாளர் ரொனால்டோ கோமிஸ் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றப்பட்ட யோசனை ஒன்றில் இணை அனுசரணையாளராக சேர்ந்துக்கொள்வதற்கு நாடுகளுக்கு வாய்ப்பிருப்பதாக கோமிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget