Ads (728x90)


நாட்டில் உள்ள சகல மருந்தகங்களையும் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் வேளையிலும் தேவையான வகையில் திறந்து வைக்க அனுமதி அளிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

வைத்தியசாலைகள், மருந்தகங்களிலிருந்து நாளாந்தம் மருந்துகளை கொள்வனவு செய்வோர் ஊரடங்குச் சட்டத்தினால் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சு இந்த உத்தரவை வழங்கியிருக்கிறது. நோயாளர்களின் நோய் தொடர்பான அட்டை மருந்துச் சீட்டு என்பனவற்றை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதிகளில் அனுமதிப் பத்திரங்களாக பயன்படுத்த முடியும்.

மருந்தகங்களில் பணியாற்றுவோருக்கும், மருந்துகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்குமாறு சுகாதார அமைச்சு பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget