Ads (728x90)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக 10 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 1,719 பேர் தங்கியிருப்பதாக பதில் பாதுகாப்பு படை அதிகாரிகளின் தலைமை அதிகாரியும் இராணுவத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களுள் 14 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் இராணுவ வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இராணுவத்தினர் சிவில் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் தற்பொழுது செயற்பட்டு வருகின்றனர். இவர்களது தேசிய பாதுகாப்பு பணி என்பது இராணுவ காலத்தில் மாத்திரம் அல்ல, நாடு அனர்த்தத்தை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் உரிய கடமைகளை நிறைவேற்றுவதே ஆகும்.

இந்த பொறுப்புக்களை இராணுவம் முன்நின்று செயற்படுத்தி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார். இன்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget