Ads (728x90)

அனுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையினை தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 கைதிகள் காயங்களுக்கு உள்ளானர்கள்.

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளுள் இருவர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

கொரோனா வைரசு தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மத்தியில் அனுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று  மாலை 4 மணிக்கு கைதிகளை பார்வையிடுவதற்காக வந்த உறவினர்களுக்கு அனுமதி வழங்காதினால் கைதிகள் சிறைச்சாலைகளுக்குள் அமைதியற்ற நிலையை ஏற்படுத்திதாக பொலிசார் தெரிவித்தனர்.

பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து சிறைச்சாலையில் இருந்து கைதிகள் எவரும் தப்பிச் செல்லவில்லை.

நிலைமை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக  பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்

Post a Comment

Recent News

Recent Posts Widget