Ads (728x90)

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தென் கிழக்கு ஆசியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிராந்தியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை துரிதமாக உயர்வடைந்து செல்வதால், அதனை கட்டுப்படுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் துரிதமாக பரவுகின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைத்த வண்ணமுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென் கிழக்கு ஆசிய வலய பணிப்பாளர் கலாநிதி Poonam Khetrapal Singh குறிப்பிட்டார்.

உலக சனத்தொகையில் நான்கில் ஒரு வீதமானோர் தென் கிழக்கு ஆசிய வலயத்திலேயே வாழ்கின்றனர்.

அங்குள்ள 11 நாடுகளில் 8 நாடுகளில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து, இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளிலேயே தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget