புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பான தமது கருத்தை ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாரும் கூட்டத்தில் வெளிப்படுத்தவில்லை. இந்த விடயங்களை கையாளும் பொறுப்பை கட்சியின் சட்டக்குழுவிடம் ஒப்படைப்பதென்றும் முடிவாகியுள்ளது.
இதேவேளை பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தயாரிக்கும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, பிரதித்தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திசநாயக்க, பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாஷிம் ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள்.
எதிர்கால அரசியல் விவகாரங்களை சஜித் பிரேமதாச மற்றும் கட்சியுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக ரணில் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment