Ads (728x90)

வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றி இருக்கின்றது. நியமனம் வழங்குவதை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் என தெரிந்தே அரசாங்கம் பாராளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் நியமனக்கடிதங்களை அனுப்பிருந்தது. அரசாங்கம் வாக்குறுதியளித்த காலத்துக்குள் நியமனம் வழங்கியிருந்தால் தேர்தல் ஆணையாளர் இடைநிறுத்தியிருக்கமாட்டார்.

அத்துடன் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் அனைத்து பட்டதாரிகளுக்கும் 3 மாதத்துக்குள் அரசதுறையில் நிரந்தர நியமனம் வழங்குவேன் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் இல்லத்தில் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget