ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தை மறந்து அனைவரும் தம்முடன் இணைந்து பயணிக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்கள் அனைவரும் மரணித்துவிட்டதாகவும் மீண்டும் அடித்துக் கூறியுள்ள கோட்டாபய ராஜபக்ச, அதனால் அந்தப் பிரச்சனை தொடர்பில் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பிலுள்ள அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களை நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் ஐ.பி.சி கொழும்பு அலுவலக செய்தியாளர் சிரியான் சுஜித் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment