Ads (728x90)

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் புதிதாக பிறந்த 10 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.

அதன் விபரம் பின்வருமாறு : ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவின் மேற்கு பகுதியில் உள்ள திமிசோரா அரசு மருத்துவமனையில் 10 பெண்களுக்கு அழகான குழந்தைகள் பிறந்தது. குழந்தைகளின் ஆரோக்கியத்தை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவர்களை பெற்ற தாய்மார்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. தாய்க்கு இல்லாத தொற்று புதிதாக பிறந்த குழந்தைக்கு எப்படி வந்தது என நாட்டின் பல ஊரடங்களிலும் வேகமாக செய்தி பரவியது.

இது தொடர்பாக திமிசோரா நகரின் பொது சுகாதார இயக்குநரை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் நெலு டடாரு. மேலும் குழந்தைகளை பராமரிக்கும் போது நோய் தொற்று பாதித்த ஊழியர்களால் குழந்தைகளுக்கும் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. தொடர்ந்து ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.

கொரோனா பாதித்த குழந்தைகள் மருத்துவர்களின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பிறந்த குழந்தைகளும் கொரோனா தாக்கத்திற்கு பாதிக்கப்படுவது மிகுந்த வேதனையளிப்பதாக பலரும் கூறுகின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget