
சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 84 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், 1 தனியார் மருத்துவமனை டாக்டருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை வீட்டுக் கண்காணிப்பில் 59,918 பேரும், அரசு கண்காணிப்பில் 213 பேரும் உள்ளனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் 32,896 பேர். இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்கள் 7,267 பேர். கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் தமிழகத்தில் உயிரிழப்பு 8 ஆக உள்ளது. இதுவரை 27 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
ரேபிட் சோதனைக்கான உபகரணங்கள் இன்றிரவு தான் வருகிறது. அது நடைமுறைக்கு வந்ததும் 30 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும். நோயின் தீவிரத்தை உணர்ந்து அரசின் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்
Post a Comment