Ads (728x90)

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று விஜய், விஜய் சேதுபதி, நடித்துள்ள மாஸ்டர். இன்று -  ஏப்ரல் 9 வெளியாவதாக இருந்த இப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளர். காலை முதலே அனைவரும் சோக டிவீட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "நீங்கள் எங்களை மிஸ் செய்வது போல் நாங்களும் உங்களை மிஸ் பண்றோம். ஒரு மாஸ்டர் மூளை, கொரோனாவுக்கு மாற்று மருந்து கண்டுபிடித்து முடிவுக்கட்டும் என நம்புகிறோம். நிச்சயம் இன்னும் பலமாக நாம் வருவோம் நண்பா. ஊரடங்கால் நமது சக்தியை ஒன்றும் செய்ய முடியாது. விரைவில் உங்களை மாஸ்டர் சந்திப்பார்", என எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget