
அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் தான் நடிக்க இருப்பதாக மகிழ்ச்சி உடன் கூறியுள்ளார்.
இந்த படத்திற்காக தனக்கு கிடைக்கும் முன்பணத்தில் இருந்து, ரூ.3 கோடியை கொரோன நிவாரண நிதிக்கு அளிப்பதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், பெப்சி அமைப்புக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.25 லட்சமும், தான் பிறந்து வளர்ந்த ராயபுரம் மற்றும் தேசியாநகர் பகுதியில் உள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் லாரன்ஸ் அறிவித்துள்ளார். இவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் வழங்கப்படும் என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment