கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப், ரஜினி, மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, சிவராஜ்குமார் ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் நடித்திருந்த 'பேமிலி' என்கிற குறும்படம் உருவாக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.பார்ப்பதற்கு ஒரே வீட்டில் எடுக்கப்பட்டது போல தோன்றினாலும் அவரவர் வீட்டிலேயே அவரவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட நடிகர்களின் குடும்ப உறுப்பினர்களே இந்த நடிகர்களின் காட்சியை படமாக்கினார்களாம்.. அந்த வகையில் மம்முட்டி நடித்த காட்சிகளை அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் தான் படமாக்கினாராம். இந்த குறும்படத்தை பிரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார்.
Post a Comment