Ads (728x90)

ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் செயலணி என்ற பெயரில் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுவதாக அமைந்திருப்பதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இவை அதிகாரத்தை ஒன்று குவிப்பதுடன் ஏற்கனவே அதிகளவான அதிகாரத்தை அனுபவித்துவரும் ஜனாதிபதியின் முக்கிய இராணுவ நண்பர்களுக்கும் மேலும் தடையற்ற அதிகாரத்தை வழங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைப்புக்கள் சரியான முறையில் மக்களால் தெரிவு செய்யப்படாதவை என்பதுடன், இவை சிவில் சேவையின் முழுமையான ஒத்துழைப்பு தேவைப்படும் ஜனாதிபதியின் நேரடியான பொறுப்பில் இருப்பதுடன், அவை நாடாளுமன்றத்தின் வழமையான ஆய்விற்கும் மேற்பார்வைக்கும் உட்படுவதில்லை.

செயலாளர்கள் மாத்திரமன்றி அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவைக் குழுக்கள் இந்த மக்களால் தெரிவு செய்யப்படாத அமைப்புக்களுக்குப் கீழ்ப்படிந்து பணியாற்ற வேண்டியிருக்கும்.

மேலும் இந்த செயலணிகள் ஒரு சமாந்தரமான அரசை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டிருப்பதுடன் பெரும்பாலும் ஜனாதிபதி, அவரது குடும்பம் மற்றும் முன்னாள் இராணுவச் சகபாடிகளுக்கு ஆதரவு வலையமைப்புக்கள் மற்றும் பொதுச்சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கான இணையற்ற அதிகாரத்தை வழங்குகிறது என்று யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget