Ads (728x90)

2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது;

ஒரு தேர்தற் காலப்பகுதியின்போது தேர்தலொன்று தொடர்பாகக் கூட்டமொன்றை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னர் இருபத்திநான்கு மணித்தியாலங்களுக்குக் குறையாமல் எழுத்திலான அறிவித்தலை, அத்தகைய கூட்டம் எந்த இடப்பரப்பில் நடைபெறவுள்ளதோ அப்பிரதேச  சுகாதார மருத்துவ அலுவலருக்குக் கொடுத்தல் வேண்டும்.

கூட்டமொன்றிற்கான அறிவித்தலைக் கொடுக்கின்ற ஒழுங்கமைப்பாளர், அத்தகைய கூட்டத்துக்கு வருகை தரும் ஆட்களின் எண்ணிக்கை 300 பேருக்கு மேற்படாதிருத்தலை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

அரசியற் கட்சியொன்றின் அல்லது சுயேச்சைக் குழுவொன்றின் தலைவர் அத்தகைய கூட்டத்தில் பங்குபற்றுமிடத்து அக்கூட்டத்துக்கு வருகைதரும் ஆட்களின் எண்ணிக்கை 500 பேருக்கு மேற்படலாகாது.

ஒழுங்கமைப்பாளர் அத்தகைய கூட்டத்துக்கு வருகை தருகின்ற ஆள் ஒவ்வொருவரினதும் பெயர், அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பு கொள்ளும் விபரம் பற்றிய பதிவேட்டை பேணுதல் வேண்டும்.

அத்தகைய கூட்டத்துக்கு வருகை தருகின்ற ஆட்களுக்குச் சவர்க்காரத்தினால் அல்லது கிருமி நீக்கியினால் கைகழுவுவதற்கான போதிய வசதியை வழங்குதல் வேண்டும். அங்கு வருகை தருகின்ற  ஒவ்வொருவரும் அவ்வித்தினுள் பிரவேசிக்கு முன்னர் தமது கைகளைக் கழுவுவதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

அத்தகைய கூட்டத்துக்கு வருகை தருகின்ற பேச்சாளர்கள் உட்பட இரு ஆட்களிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

அத்தகைய கூட்டத்துக்கு வருகை தருகின்ற ஆள் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசமொன்றை அணிந்திருப்பதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

அத்துடன் ஒருவரினால் பயன்படுத்தப்பட்டதன் பின்னர் உடனடியாக ஒலிபரப்பி சாதனங்களைத் தொற்றுநீக்கஞ் செய்தல் வேண்டும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget