கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
குறித்த விண்ணப்பங்களை அன்றைய தினமோ அல்லது அதற்கு முன்னரோ பதிவு தபால் மூலம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment