உலகின் வளம் நிறைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை கொண்ட இலங்கை வலுவான விதத்தில் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தியுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதி ராஜியா பென்ட்சே தெரிவித்துள்ளார்.
அதிக வளங்கள் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரசினை வலுவான விதத்தில் கட்டுப்படுத்திய மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் காணப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
சிறந்த முறையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்பு முறை, தொற்று நோய்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும அரசாங்கம் முன்கூட்டியே எடுத்த நடவடிக்கைகளே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு வெளிநாட்டில் இருப்பவர்களை அழைத்து வந்து அவர்களை தனிமைப்படுத்தி சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படுவதாகவும், அரசாங்கத்துடன் மற்றைய தரப்புகள் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்காதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment