பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அதிகளவில் வீடுகளில் முடங்கியுள்ளதால் அதிகமாக ஒன்லைனில் பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் இணையதள நிறுவனங்களின் வருமானம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 22 பில்லியன் டொலர் அதிகரித்து 100 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை தொட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவின் சென்டிபில்லியனர்கள் பட்டியலில் ஜெப் பெசோஸ் மற்றும் பில்கேட்ஸ் ஆகியோருடன் மார்க் ஜூக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment