Ads (728x90)

கதிர், ஓவியா நடிப்பில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய "மதயானைக்கூட்டம்" திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜி.வி பிரகாஷ் தயாரித்த இந்த படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.15 கோடி வசூல் செய்து வெற்றிப்பட பட்டியலில் இணைந்தது.

இந்த நிலையில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் ஆறு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு "இராவண கோட்டம்" என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார். இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கவுள்ளார்.

முற்றிலும் வித்தியாசமான கதைக்களமான இந்த படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர்களுக்கு சாந்தனு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget