2020 பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதன் காரணமாக 150,000 பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்ததன் விளைவாக இவ்வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடனேயே தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை தாமதிக்காது செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்டவர்கள் செப்டெம்பர் 02 ஆம் திகதி தமக்கு அருகில் உள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற பட்டதாரிகளின் பெயர்கள் பட்டியலில் இல்லாதவிடத்து ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட 1,00,000 பேரை தொழில்களில் அமர்த்துதல் நிகழ்ச்சித் திட்டம் செப்டெம்பர் 02 ஆம் திகதி முதல் ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Post a Comment