புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் 20ஆம் திகதி கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரையின் கீழ் ஜனா திபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர்.
இதனையடுத்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என அந்த அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment