நாடு முழுவதும் இன்று முதல் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இயக்கம் வழமைக்கு திரும்பியுள்ளதால் இன்று முதல் மின்வெட்டு ஏற்படாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கடந்த நாட்களில் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் நான்கு நாட்களுக்கு பகுதியளவில் மின்சாரம் தடை செய்யவுள்ளதாக மின்சார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment