Ads (728x90)

ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 03 ஆயிரத்து 682 பேரும், சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 03 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 07 ஆயிரத்து 452 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முகம் கொடுக்க நேரிட்டதால் ஐந்து மாதங்களின் பின்னரே பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற நாளாக ஆகஸ்ட் 05 ஆம் திகதி மாறியுள்ளது.

அன்றைய தினம் வாக்களிப்பு முடிவடைந்ததும் மறுநாள் 06 ஆம் திகதி காலை 8 மணி முதலே வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும். முதலாவது தேர்தல் முடிவு மாலை 06.00 மணியளவில் அறிவிக்க முடியுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அன்று நள்ளிரவுக்குள் ஆளப்போவது யாரென்பது தெரியவரும். வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் விருப்பு வாக்குகள் 07ஆம் திகதியே வெளியிடப்படவுள்ளன.

அடுத்த வார இறுதியில் புதிய அமைச்சரவையும் பதவியேற்கும் எனத் தெரியவருவதுடன், தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வெளியானதும் 20 ஆம் திகதிக்கு முன்னர் 09ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கான அதிவிசேட வர்த்தமானியையும் ஜனாதிபதி வெளியிடுவார் என அறிய முடிகின்றது.   கபே, பெப்ரல் உட்பட பல உள்நாட்டு, சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. 

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்குவரும் நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் யாவும் இன்று இறுதிக்கட்ட பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளன. 


Post a Comment

Recent News

Recent Posts Widget