Ads (728x90)

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் மிக விரைவில் கூடவுள்ளது. கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாவை சேனாதிராசா மத்தியகுழுவை கூட்டுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவியை மாவை சேனாதிராசாவிடமிருந்து பறித்து சி.சிறிதரனுக்கு வழங்கும் இரகசிய முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன் ஈடுபட்டுள்ளார். இதனடிப்படையிலேயே
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறையின் த.கலையரசனிற்கு வழங்கப்பட்டது.

இது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று பகல் தொலைபேசி வழியாக கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை தொடர்பு கொண்ட மாவை சேனாதிராசா உடனடியாக மத்தியகுழுவை கூட்ட உத்தரவிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget