வடக்கு-கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியிலும் நேற்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு பேரணி நேற்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பேரணியாக ஏ-9 வீதியூடாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்ததுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதன்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மைக்கேல் பச்லெட் ஜெரியாவிற்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment