நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அமைச்சுப் பதவி கோருபவர்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அறுதிப்பெரும்பான்மையை பெற்றுள்ள இந்நிலையில், நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ச பிரதமராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
இந்நிலயில் புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மாவட்ட மட்டத்தில் அதிக்கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் முன்வைக்கும் கோரிக்கை காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக தெரியவருகிறது.
இந்த நிலைமையில் குறித்த நபர்கள் சம்பந்தமாக ஜனாதிபதி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் இப்படியான தரப்பினருக்கு அமைச்சு பதவிகளை வழங்கவிருக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகலாம் எனவும் தெரியவருகிறது.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக கடும் அதிருப்தியடைந்துள்ள ஜனாதிபதி “சேவை செய்ய அமைச்சு பதவிகள் அவசியமா?” என வினவியுள்ளதாகவும்,
பதவி, சிறப்புரிமைகளை எதிர்பார்த்து அரசியலுக்கு வரும் தரப்பினர் நாட்டை கட்டியெழுப்பும் தனது தீவிரமான தேவைக்கு தடையாக இருப்பதாகவும், பதவிகள் மற்றும் அமைச்சு பதவிகளை புறந்தள்ளி விட்டு, நாட்டுக்காக அர்ப்பணிப்பு செய்ய தயாராக இருப்போரே தனக்கு தேவை எனவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment