வாழ்க்கை செலவை கட்டுப்படுத்த அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்களைப் போன்று நுகர்வோருக்கு இதன் மூலம் நிவாரணம் அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சந்தையில் நிலவும் தேவை, விநியோக ஏற்ற இறக்கங்கள், காலநிலை தாக்கம், பருவகால உற்பத்திகள், தயாரிப்பாளர்களினால் இடம்பெறும் மாற்றம், சர்வதேச சந்தையில் விலைகள் போன்ற விடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வாழ்க்கைச் செலவை நிலையானதாக முன்னெடுப்பதற்கு தேவையான கொள்கை மற்றும் நடைமுறைத்தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு தொடர்புடனான அமைச்சரவை உப குழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment