Ads (728x90)

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர் கொண்ட விளைவுகளை சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என சரத் பொன்சேகா நாடாளுமன்றில் நேற்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கை விவாதத்தின் போது பேசிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சிங்கள சமூகத்தை குறை மதிப்பிற்கு உட்படுத்துபவர்கள் விரும்பத்தகாத சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம் என்றார்.

திரு.விக்னேஸ்வரன் போன்ற எம்.பி.க்கள், இந்த நாட்டில் பேசப்படும் மிகப் பழமையான மொழி தமிழ் என்று கூறி சிங்களவர்களின் நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கின்றனர். சிங்களவர்கள் தமிழர்களுக்குப் பிறகு இந்த தீவுக்கு வந்தார்கள் என்பதை அவர் குறிக்க முயற்சிக்கிறார். அவர் மற்றொரு பிரபாகரனாக இருக்க முடியாது. ஏனெனில் அவருக்கு வயதாகிவிட்டது. விக்னேஸ்வரன் மற்றொரு பிரபாகரன் ஆக முயன்றால் அவர் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை உணர வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget