20 வது திருத்தத்தை ஜனநாயகத்துக்கான மரண அடி என வர்ணித்துள்ள சஜித் பிரேமதாச, அதிகார பரவலாக்கலே சர்வதேசத்தில் தற்போது காணப்படும் போக்கு எனவும் தெரிவித்துள்ளார்.
20 வது திருத்தம் ஒரு தனிநபரின் கரங்களில் அதிகாரத்தை குவிக்கின்றது எனவும் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். உத்தேச 20 வது திருத்தத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளை 19 பிளஸ் குறித்து பாடுபடும் என அவர் தெரிவித்துள்ளார்.
20வது திருத்தத்தை தோற்கடிப்பதற்காக பல்வேறு சக்திகளை அணி திரட்டுவதற்கான குழுவொன்றை ராஜித சேனாரட்ண தலைமையில் நியமித்துள்ளோம் என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் 19 வது திருத்தத்துக்கான மாற்றீடையும் தனது கட்சி முன்வைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment