ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது அதிக நம்பிக்கை இருந்து வந்தது. இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், தடுப்பூசி பரிசோதனை மேற்கொண்ட தன்னார்வலர் ஒருவருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் தற்போது பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment