எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் இன்று சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தை வாசித்ததன் பின்னர் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் 20 ஆம் அரசியலமைப்பு திருத்தம் சபையில் சமர்பிக்கப்பட்டது.
இந்நிலையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பிரதான எதிர் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வௌியிட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வௌியிட்டதுடன் அழிவுக்கு கொண்டு செல்லும் 20 வேண்டாம் என்ற பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட இன்றைய நாள் இலங்கையின் கறுப்பு புள்ளியாக பதிவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்தார்.

Post a Comment