அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஊடகங்களின் முன்னிலையில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் நிலத்தை எல்லை நிர்ணம் செய்ய தாமதித்ததன் விளைவாக நிலத்தின் ஒரு பகுதி விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன்னை சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
தேரர் செங்கலடியிலுள்ள தொல்லியல் திணைக்கள காணியை எல்லை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்தினார்.
“உனது அதிகாரியை இங்கு வருமாறு சொல் அல்லது உன்னைக் கொன்று விடுவேன்” என சுமணரத்ன தேரர் அரசாங்க அதிகாரியிடம் கூறினார்.
இதேவேளை அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையை தொல்லியல் திணைக்களம் பின்பற்றுவதாக தேரரிடம் பொலிஸார் கூறினர். இருப்பினும் தொல்லியல் தொடர்பான விடயங்களில் வழிகாட்டுதல்களை வழங்க சட்ட மா அதிபருக்கு உரிமையில்லை எனவும் தேரர் தெரிவித்தார்.

Post a Comment