அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக இதுவரையில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் உட்பட ஆறு பேரால் இன்றும் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேநேரம் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனின் மனுவைத் தவிர்த்து, யாழ்ப்பாணத்திலிருந்து எஸ்.சி.சி.இளங்கோவன் மற்றும் நாட்டின் இரண்டு குடிமகன்கள், இலங்கை மனித உரிமை ஆர்வளர் ஸ்ரீமி அப்துல் சனுன் ஆகியோரும் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன் இலங்கை ட்ரான்ஸ்பரன்ஸி இன்ரனெஷனல் அமைப்பும் இன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
இதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐக்கிய மக்கள் சக்தி சட்டத்தரணி இந்திக கல்லேஜ், மாற்று கொள்கைகளிற்கான மையத்தின் சார்பாக பைக்கியசோதி சரவணமுத்து, அனில் கரியவசம் மற்றும் நாகானந்த கொடித்துவக்கு ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Post a Comment